இந்தியா

பீகார்: டிக்கெட் எடுக்காததால் கீழே தள்ளி விட்ட நடத்துனர் - பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி

EllusamyKarthik

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில்  பகுதியில் பேருந்து கட்டணம் செலுத்த இயலாத தினக்கூலியை ஓடும் பேருந்திலிருந்து நடத்துனர் தள்ளிவிடப்பட்டதால் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள தேசிய நெடுஞ்சால் 22-இல் நிகழ்ந்துள்ளது. 

உயிரிழந்த கூலி தொழிலாளியின் பெயர் மகாராஜ் தாஸ் என தெரியவந்துள்ளது. அவருக்கு வயது 47. சம்பவத்தன்று அவர் வாரணாசியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பேருந்து கட்டணத்திற்கான காசு இல்லாத காரணத்தினால் டிக்கெட் எடுக்கவில்லை என தெரிகிறது. 

இது குறித்து நடத்துனர் மற்றும் கூலித் தொழிலாளி தாஸுக்கும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது ஓடிக் கொண்டிருந்த பேருந்திலிருந்து தாஸை நடத்துனர் தள்ளிவிட்டுள்ளார். அதனால் சாலையில் விழுந்த அவர் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறி உள்ளது. 

தொடர்ந்து அவருக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் போகும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து பேருந்தை சீஸ் செய்த போலீசார், நடத்துனர் மற்றும் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த தாஸின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.