உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் பாஜக எம்.பி.யும், பிரபல இந்தி நடிகையுமான ஹேமமாலினியை காளை மாடு ஒன்று மூட்ட ஓடி வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் நடந்து செல்ல வேண்டிய வழியில் காளை மாடு ஒன்று படுத்திருந்தது. இதைக்கண்ட ஒருவர் காளையை விரட்ட முயன்ற போது, அது எழுந்து ஹேமமாலினியை நோக்கி ஓடி வந்தது. அப்போது காவலர்கள் உட்பட அனைவரும் விலக, அது ஹேமமாலினி அருகே சென்றது. இருப்பினும் அங்கிருந்த பாதுகாவலர்கள் விரட்ட, அந்த காளை சற்று விலகி ஓடியது. இந்த சம்பவத்தால் ஹேமமாலினி உட்பட அங்கிருந்த அனைவருமே பதற்றமடைந்தனர்.