சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு
சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு PT
இந்தியா

திருப்பதி : மலைப்பாதையில் நடந்து சென்ற 6 வயது சிறுமி, சிறுத்தை தாக்கி உயிரிழப்பு!

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நெல்லுரை சேர்ந்த தினேஷ் என்பவர் அவரது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். தனது 6 வயது மகள் லட்ஷிதாவுடன் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளார் அவர். அப்போது மலைப் பாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே லட்ஷிதா திடீரென காணாமல் போனார்.

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு

பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், திருமலை இரண்டாவது நகர காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விசாரணையும் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். உடற்கூறாய்வுக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு லட்ஷிதாவின் உடல் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சிறுத்தை தாக்கியதா என்ற கோணத்தில் விசாரணை!

ஏற்கெனவே திருப்பதி மலைப்பாதையில்கடந்த ஜுன் மாதம் கர்னூல் மாவட்டம் அதோனியை சேர்ந்த கோண்டா மற்றும் ஷிரிஷா தம்பதியினரின் 4 வயது மகன் கௌசிக்கை பாதயாத்திரை சென்றபோது சிறுத்தையொன்று கவ்வி சென்றது. அதை உடனடியாக கண்டறிந்ததால் பொது மக்கள், போலீசார் சத்தம் போட்டனர். இதனால் சிறுவனை வனப்பகுதியில் சிறுது தூரம் கவ்வி சென்று வனப்பகுதியில் விட்டு சென்றது சிறுத்தை.

சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு

இந்நிலையில் இச்சிறுமியும் சிறுத்தையால் தாக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கோணத்தில் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மலைப்பாதையில் பக்தர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.