ஆழ்துழை கிணறு
ஆழ்துழை கிணறு புதிய தலைமுறை
இந்தியா

குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 வயது குழந்தை! அறம் பட பாணியில் நடந்த மீட்பு பணிகள்!

ஜெனிட்டா ரோஸ்லின்

குஜராத் மாநிலத்தில், 15 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டம் காவான என்ற கிரமாத்தில் விவசாயக் கூலித் தொழிலாளிக்கு ராஜூ என்னும் 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. சம்பவ தினமான பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று, விளையாடி கொண்டிருந்த சிறுவன், அருகில் 15 அடி ஆழமுள்ள திறந்தநிலையில் இருந்த ஆழ்த்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் அவசர சேவை பணியாளர்கள் அடங்கிய மீட்புக்குழு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆழ்துழை கிணற்றுக்கு இணையான குழியை தோண்டி அதன் வழியாக குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டடுள்ளது.

இந்நிலையில், தொடர் போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு 12.30 மணி அளவில் சிறுவன் மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜாம்நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறுவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் சிறுவனின் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.