ராஜஸ்தானில் ஆன்மிக சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர், 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற தனியார் பேருந்து ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 6 பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உதய்பூர் அருகே, நெஹ்லா என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் பயணித்த பக்தர்கள் அனைவரும் குஜராத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டவர்கள் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.