இந்தியா

பிரதமர் மோடி அறிவித்த செயலியில் பண மதிப்பு நீக்கத்திற்கு அதிக மக்கள் ஆதரவு

பிரதமர் மோடி அறிவித்த செயலியில் பண மதிப்பு நீக்கத்திற்கு அதிக மக்கள் ஆதரவு

Rasus

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டை முன்னிட்டு மக்கள் கருத்தறிய பிரதமர் மோடி அறிவித்த செயலிக்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது.

கறுப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் 'NM' என்ற ஆப் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோடி அறிவித்த செயலிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

ஆப் குறித்து அறிவிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் வந்த 50,000 கருத்துகளில் 81 சதவிகிதம் பேர் பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமான 5 புள்ளிகளில் 4.6 புள்ளிகள் பணமதிப்பு நீக்கத்துக்கு ஆதரவாக கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.