இந்தியா

கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 8,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 8,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

kaleelrahman

கேரளாவில் இரண்டாவது நாளாக 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு. இன்று மேலும் 8,126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 8,000ஐ கடந்து மேலும் 8,126 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,97,301 ஆக. அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவால் 20 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 4,856 ஆகியுள்ளது. தற்பொழுது 63,650 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2 ,959 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,28,475 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் இருந்து கேரளா திரும்பிய 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டுள்ளனர்.