இரண்டாம் உலகப் போரின்போது விமான விபத்தில் உயிரிழந்த மூன்று அமெரிக்க ராணுவ வீரர்களுடைய சடலங்களின் எச்சங்கள் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1944இல் ஜப்பானில் தாக்குதல் நடத்திவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அமெரிக்க ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி, இன்றைய அசாமின் சாபேகாதியில் உள்ள நெல் வயலில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணித்த 11 வீரர்களும் உயிரிழந்தனர். போர் முடிந்த பின் விபத்து நடந்த இடத்துக்கு வந்த அமெரிக்கக் குழுவினர் ஏழு சடலங்களை கண்டெடுத்தனர். மற்ற நால்வரின் சடலங்களைக் கண்டுபிடிக்கும் பணி சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதில் செஸ்டர் எல்.ரிங்கி, வால்டர் பி மிக்லோஷ், டோனல் சி அய்க்கென் ஆகிய மூவருடைய சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகமும் அமெரிக்காவில் உள்ள நெப்ரஸ்கா லிங்க பல்கலைக்கழகமும் இந்த ஆய்வை மேற்கொண்டன.