ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் உள்ள டிராகட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, பாதுகாப்புப் படையினர் அவ்விடத்தை சுற்றி வளைத்து தாக்குதல் தொடுத்தனர். இதில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்தப் பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேபோல் அனந்த்நாக் பகுதியில் நடைபெற்ற சண்டையில் மற்றொரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார். இங்கு ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டுள்ளனர்.
ஷோபியான் பகுதியில் உள்ள கச்தூரா என்ற இடத்தில் சில வீடுகளில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிராகட், கச்தூரா, ஷோபியான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகப் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.