ஆப்கானிஸ்தான் தலைநகர் காந்தகாரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
இந்தப் பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசார் ஆகியோரை கொண்ட பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்படைகளுக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காந்தகார், மரூஃப் மாவட்டத்தில் தலிப்பான்கள் நடத்திய குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் ஜெனரல் தடீன் கான் கூறுகையில், மரூப் மாவட்டம் காந்தகார் பகுதியில் இன்று காலை 4 தாலிபான் மனிதவெடிகுண்டுகள் இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பாதுகாப்பு படையினர் இந்தத் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சிறப்பு தூதர் 7 வது சுற்று அமைதிப் பேச்சுக்கு வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.