இந்தியா

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி

webteam

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு , மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு உரையாற்றினார். சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகளில் இந்தியா 6ஆவது இடத்தை பிடித்துள்ளதை பெருமிதமாக தெரிவித்த மோடி, REFORM, PERFORM, TRANSFORMஆகியவையே மத்திய அரசின் 3 தாரக மந்திரங்கள் என கூறினார். ஊழல்வாதிகளுக்கும் கறுப்புப்பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் இருமடங்காக உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

4 ஆண்டுகளில் தன்னுடைய அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், சுய வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் முத்ரா திட்டத்தில் 13 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு , மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் என உறுதி கூறினார்.ஆபத்தான கட்டத்தில் இருந்த பொருளாதாரம், தற்போது மீண்டுள்ளதாக கூறிய பிரதமர், தொழில் வளர்ச்சிக்கான தடைகள் நீக்கப்பட்டு, தற்போது சிகப்பு கம்பள மரியாதை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் அதிலிருந்து மீள இந்த அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.