bus accident pt desk
இந்தியா

30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஆந்திர அரசு பேருந்து: திருமணத்திற்குச் சென்ற 7 பேர் பலி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் திருமணமொன்றில் கலந்துகொள்ள சென்றவர்களின் பேருந்து, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

webteam

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பொதிலியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காக்கிநாடாவில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்க ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நள்ளிரவு 12.15 மணிக்கு பொதிலியில் இருந்து புறப்பட்டச் சென்றுள்ளனர். அந்தப்பேருந்து, தர்ஷி அருகே சென்று கொண்டுருந்தபோது நாகர்சாகர் கால்வாயில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

treatment

இதில், அப்துல் ஹானி (60) முல்லா ஜானி பேகம் (65), முல்லா நூர்ஜஹான் (58) ஷேக் ரமீஸ் (48), ஷேக் ஷபீனா (35), ஷேக் ஹினா உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.