இந்தியா

விஷவாயு தாக்கி துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு - குஜராத்தில் சோகம்

rajakannan

குஜராத்தில் கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்யும் போது விஷவாயு வெளியேறியதால், துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபோய் டெசில் பகுதியில் உள்ள ஹோட்டலில் கழிவுநீர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது, திடீரென விஷவாய் வெளியேறியுள்ளது. அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 4 துப்பரவு தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணையில், முதலில் ஒருவர் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் மேலே வரவில்லை. அதனால், அவரை தேடி மேலும் 6 பேர் உள்ளே தொட்டியில் இறங்கியுள்ளனர். 7 பேர் விஷவாயு தாக்கி அங்கேயே உயிரிழந்தனர். 7 பேரை காணவில்லை என்றவுடன் நகராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு வீரர்களுடன் வந்தனர். ஆனால், அவர்களால் உள்ளே இருந்து சடலங்களை உடனடியாக எடுக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.

ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் கைதாகியுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.