சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கோவன் மாவட்டத்தில் உள்ள சிட்டகோட்டா கிராமத்தின் காடுகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக, டெபுடி ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். ‘’இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள் ளன. அவர்களிடம் இருந்த ஏகே 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.