திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்காக வரும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது. 9 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 17 ஆம் தேதி நடைபெறயுள்ளது. பிரம்மோற்சவத்திற்கு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Read Also -> ஹெச்.ஐ.வி நோயாளிகளைப் பாதுகாக்கும் சட்டம் அமல்
மேலும் 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 650 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கோவிலின் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தகவல் தெரிவித்துள்ளார். பிரம்மோற்சவ விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.