காஷ்மீர் நௌகாம் காவல் நிலையம் வெடிவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் web
இந்தியா

காஷ்மீர் காவல் நிலையத்தில் வெடிவிபத்து.. 7 பேர் பலி.. 27 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.

Rishan Vengai

ஜம்மு-காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை சோதனை செய்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நௌகாம் காவல் நிலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்தது. நவம்பர் 14 வெள்ளிக்கிழமை இரவு நௌகாம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வெடிபொருட்களை போலீஸார் மற்றும் தடவியல் குழுவினர் சோதனை செய்தபோது வெடிபொருட்கள் வெடித்து சிதறியதாக சொல்லப்படுகிறது.

காஷ்மீர் காவல் நிலையம் வெடிவிபத்து

வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது..

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட வெடிப்பொருட்கள், தடயவியல் சோதனைக்காக காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடித்துச் சிதறியதாக சொல்லப்படுகிறது..

காஷ்மீர் காவல் நிலையம் வெடிவிபத்து

உயிரிழந்தவர்களில் வெடிபொருட்களை சோதனை செய்துகொண்டிருந்த போலீஸார் மற்றும் தடவியல் குழுவினரே அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..