இந்தியா

மக்களவை தேர்தல் : தொடங்கியது 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல் : தொடங்கியது 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

webteam

மக்களவைத் தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் இன்று தொடங்கியது.

17-ஆவது மக்களவைத் தேர்தலில் இதுவரை 5 கட்டங்களாக 424 தொகு‌திகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இந்நிலையில் 59 தொகுதிகளில் இன்று ஆறாவது கட்டத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசத்தில் அதிக‌‌பட்சமாக 14 தொகு‌திகளில் தேர்தல் ‌நடைபெறுகிறது. ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பீகார், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளிலும் 968 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஆறாம் கட்டத் தேர்தலுக்காக இந்த 7 மாநிலங்களிலும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.