இந்தியா

68-ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம்

68-ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம்

Rasus

இந்தியாவின் 68-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

டெல்லி ராஜபாதையில் நடைபெற உள்ள குடியரசு தினக் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றி வைத்து அணிவகுப்பைப் பார்வையிடுகிறார். விழாவில் துணை குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள், சிறப்புப் பிரதிநிதிகள், ‌நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் முகமது பின் சயது அல் நஹ்யான் பங்கேற்கிறார். உக்ரைன் நாட்டின் முதலாவது துணைப் பிரதமர் பொறுப்பேற்றுள்ள ஸ்டீபன் குபியும் இதற்காக வந்திருக்கிறார். குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க, டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போலீசார், தேசிய ராணுவப் படையினர் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காலை 5 மணி முதல் 12 மணி வரை டெல்லியின் முக்கிய சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்பில்‌ நாட்டின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் முப்படைகளின் அணி வகுப்பு, என்.சி.சி. மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைக்குழு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறுகின்றன.