இந்தியா

அமிர்தசரஸ்: தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 பேர் உயிரிழப்பு

Sinekadhara

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். அதில் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவர் கூறியபோது, இரண்டு நாட்களுக்கு முன்பே ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியதாகவும், மேலும் நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லுமாறு குடும்பத்தினரிடம் கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மூன்று நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகமும், மருத்துவ கல்லூரி நிர்வாமும் தெரிவித்தனர்.

மேலும் பெரும்பாலான கொரோனா நோயாளிகளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதால் ஆக்சிஜன் அனைத்தும் அங்கு பயன்படுத்தப்படுவதால் மற்ற மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் நீல்காந்த் மருத்துவமனை குற்றம்சாட்டியுள்ளது.