குஜராத்தில், நாதுராம் கோட்சேவின் பிறந்தநாளைக் கொண்டாடிய இந்து மகா சபையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்றவர் நாதுராம் கோட்சே. இவர் மகாராஷ்டிர மாநிலம் புனே அருகேயுள்ள பராமதியில் 1910ம் ஆண்டு மே 19 ஆம் தேதி பிறந்தவர். இவர் பற்றி, இப்போது சர்ச்சை கருத்துகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் லிம்பியாயத் பகுதியில் உள்ள சூரியமுகி அனுமன் கோவிலில், இந்து மகா சபையை சேர்ந்த சிலர் கோட்சே பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். இதில் சுமார் 15 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் உள்ளூர் டிவி சேனல்களையும் செய்தியாளர் களையும் அழைத்திருந்தனர்.
அவர்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோட்சே புகைப்படத்தை வைத்து விளக்கேற்றி உள்ளனர். பின் அவர்கள் இனிப்புகளை வழங்கி, பஜனை பாடலையும் பாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையறிந்த போலீ சார், பிறந்த நாள் கொண்டாடிய இந்து மகா சபையை சேர்ந்த 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘’மகாத்மா காந்தி, தேசத் தந்தை. மக்கள் அவருக்கு மதிப்பளிக்க வேண்டும். சிலர் இப்படி தூண்டிவிட்டு, கோட்சே பிறந்த நாளை கொண்டாடியுள் ளனர். இதை சகிக்க முடியாது. அனுமதிக்கவும் முடியாது. நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்’’ என்று சூரத் காவல் ஆணையர் சதீஷ் சர்மா தெரிவித்துள்ளார்.