இந்தியா

காஷ்மீரில் மேக வெடிப்பு: கனமழையால் 6 பேர் உயிரிழப்பு; 30 பேர் மாயம்

JustinDurai
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள ஹான்சன் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதீத கனமழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளப்பெருக்கு, வீடுகள் மற்றும் கட்டடங்களை அடித்துச் சென்றது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஹான்சன் கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கி காணாமல்போன 30 பேரை ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மேலாண் படையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர். 25 கி.மீ வரை தேடுதல் பணியை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக காஷ்மீர் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.