கர்நாடகாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவின் கர்வார் கடற்கரை பகுதியில் படகு ஒன்றில் சுமார் 22 பேர் கடலுக்குள் பயணம் செய்துள்ளனர். சுற்றிப் பார்க்க அவர்கள் கடலுக்குள் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே அவர்கள் சென்ற படகு எதிர்பாராதவிதமாக கடலுக்குள் மூழ்கி விபத்திற்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.