இந்தியா

4ஜி-யை விட பத்து மடங்கு வேகம் அதிகம் - 5ஜி ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சங்கீதா

5G அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விட தொலைத்தொடர்புத்துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் ஏலத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு வேகமாக 5ஜி அலைக்கற்றை செயல்படும் எனக் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்குவதில் செலவை குறைக்கும் நோக்கில் 72 ஆயிரத்து 97 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுப்பவர்கள் அதற்கான தொகையை 20 தவணைகளாக செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஏர்டெல், ஜியோ, வோடோபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள், குருகிராம், பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை, சந்திகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத் ஐதராபாத், லக்னோ, புனே, காந்திநாகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சேவை வெள்ளோட்டத்திற்கான மையங்களை தயாராக வைத்திருப்பதால், இந்த நகரங்களில் 5 ஜி சேவை நாட்டிலேயே முதலாவதாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.