இந்தியா

57 மணி நேரம் சமையல்: இந்தியர் சாதனை

57 மணி நேரம் சமையல்: இந்தியர் சாதனை

webteam

இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நாக்பூரில் கடந்த வெள்ளியன்று தொடங்கிய இந்த சாதனை முயற்சியை அவர் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார். அவர் நிகழ்த்திய சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் விஷ்ணு மனோகர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.