இந்தியா

மோடி பிறந்த நாளுக்கு 567 கிலோ லட்டு

webteam

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 567 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு டெல்லியில் தயாரிக்கப்பட்டது. 

பிரதமர் மோடியின் 68வது பிறந்தநாள் நாடு முழுவதும் பா.ஜ.க.வினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆங்காங்கே பல்வேறு விழாக்களும், தூய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 
இதனிடையே, சுலப் இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சார்பில் டெல்லியில் 567 கிலோ எடையுள்ள லட்டு செய்யப்பட்டது. பின்னர், இந்த லட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகத்துக்கும் லட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த லட்டை செய்ய 230 கிலோ மாவும் 221 கிலோ சர்க்கரையும் தேவைப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.