இந்தியா

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு

webteam

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து அதற்கான தொகை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முதல் அலையை விட 2 வது அலை மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதால் சிகிச்சை பெறும் நபர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை என்பது அத்தியாவசியமானதாக இருக்கிறது.

குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.