இந்தியா

கடந்த ஓராண்டில் காட்டு யானைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? - மத்திய அரசு

webteam

கடந்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் 535 பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ஆந்திரா, சட்டிஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, அசாம், நாகலாந்து, மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் 2021-22ஆம் நிதி ஆண்டில் 535 மனிதர்கள் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தைப் பொறுத்தவரை 2021-22ஆம் ஆண்டில் 37 பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.