மும்பையில் 53 செய்தியாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தி சேகரிக்கும் பணியில் இருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா உறுதியான 53 பேரில் பெரும்பாலானோருக்கு நோய்த்தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதியானோரின் எண்ணிக்கை 17,265லிருந்து 17,656 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543லிருந்து 559 ஆக உயர்ந்துள்ளது.