500 விரைவு ரயில்களின் வேகம் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்களின் வேகத்தைக்கூட்டி, பயண நேரத்தை குறைக்கும் வகையில் புதிய ரயில்வே கால அட்டவணை தயாராகிறது. சுமார் 500 ரயில்களின் வேகம், அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்த பட்சம் 15 நிமிடம் முதல் அதிகபட்சம் 2 மணி நேரம் வரை பயண நேரம் குறைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்தி வைக்கும் நேரமும் குறைக்கப்படுகிறது. குறைவான பயணிகள் மட்டுமே ஏறி இறங்கும் ரயில் நிலையங்களில் அதிவேக ரயில்கள் நிற்காது.
ரயில்களின் புறப்பாடு, வருகை நேரங்களின் மாற்றம் போன்றவை அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.