உயிரிழந்த சிறுமி
உயிரிழந்த சிறுமி pt web
இந்தியா

செல்போனில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்து மரணம்- மாரடைப்பு காரணமா?

Angeshwar G

உத்திரப்பிரதேச மாநிலம் அம்ஹோரா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கோட்வாலியில் ஹதிகேடா என்ற பகுதியைச் சேர்ந்தவர் காமினி என்ற சிறுமி. ஐந்து வயதான இவர் தனது தாயின் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவரது செல்போனில் கார்ட்டூன்கள் பார்த்துக்கொண்டுள்ளார். திடீரென மயக்கமடைந்த அவர் தான் வைத்திருந்த செல்போனையும் தவறவிட்டுள்ளார்.

மாரடைப்பு

உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ அறிக்கையின்படி, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்ஹோரா மற்றும் பிஜ்னூர் மாவட்டங்களில் இது முதன்முறையான மரணம் இல்லை என்றும் குழந்தைகள் மற்றும் இளவயதினர் என இதுவரை ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளது என the health site.com தெரிவித்துள்ளது.

அம்ஹோரா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி இதுகுறித்து கூறுகையில், “உடலை பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு குடும்பத்தினரிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா என்பது விசாரணையின் மூலம் தெரிய வேண்டிய விஷயம்” என தெரிவித்துள்ளார். ஹசன்பூரின் சமூக நல மைய பொறுப்பாளர் துருவேந்திர குமார் கூறுகையில், மாரடைப்பால் சிறுமி இறந்திருக்கலாம்” என தெரிவித்தார்.