accident pt desk
இந்தியா

தெலங்கானா: ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து – விவசாய பணிக்குச் சென்ற 5 பெண்கள் பலி

தெலங்கானாவில் இருந்து விவசாய பணிக்காக ஷேர் ஆட்டோவில் ஆந்திராவுக்குச் சென்ற போது லாரி மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

webteam

தெலங்கானா மாநிலம் நல்கொண்டாவை சேர்ந்த 23 கூலித் தொழிலாளர்கள், ஆந்திராவிற்கு விவசாய பணிக்காக ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது பல்நாடு மாவட்டம் குர்ஜாலா மண்டலம் தாகேபள்ளி பகுதியில் எதிரே வந்த லாரி, ஆட்டோ மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

Auto

இதில், ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த புக்யா பத்மா (25), வர்த்யா சக்ரி (32), இஸ்லாவத் மஞ்சுளா (25), பூக்யா சோனி (65), மாலோத் கவிதா (33) ஆகிய 5 பெண்களின் சடலங்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக குர்ஜாலா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பிச் சென்ற நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.