இன்று இந்தியாவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் மூன்றாம் கட்டமாகவும், மற்ற மாநிலங்களில் முழு பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 475 தொகுதிகளில் 1,53,538 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவுசெய்துள்ளனர்.
தேர்தல் ஆணையத் தரவுப்படி, புதுச்சேரியைத் தொடர்ந்து அசாமில் 80%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் சில வன்முறைகளுக்கு இடையே 77.68% வாக்குகளும், கேரளாவில் 74..02% வாக்குகளும், தமிழகத்தில் 71.79% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.