இந்தியா

பெண்ணின் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்திய போலீசார் - வைரல் வீடியோ

பெண்ணின் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்திய போலீசார் - வைரல் வீடியோ

webteam

பெண் ஒருவரை காவலர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகியதால், 5 காவலர்கள் மீது ஹரியானாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் பெண் ஒருவரை தலைமைக் காவலர் ஒருவர் பெட்ல்ட்டால் கடுமையாக தாக்குகிறார். அவரைச் சுற்றி சில காவலர்கள் அந்தப் பெண்ணை மிரட்டிய படியும், அடிக்கும்போது பிடிக்கும்படியும் நிற்கின்றனர். இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண் தாக்கப்பட்ட வீடியோ வெளியானது. அத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவியது. 

இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஹரியானா காவல்துறைக்கு மகளிர் ஆணையம் அழுத்தம் கொடுத்தது. அதன் அடிப்படையில் தலைமைக் காவலர்கள் பால்தேவ் மற்றும் ரோகித் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஃபரிதாபாத் காவல் ஆணையர் சஞ்சய் உத்தவிட்டார். மேலும், சிறப்புக் காவலர்கள் கிரிஷான், ஹர்பல் மற்றும் தினேஷ் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

முன்னதாக, ஃபரிதாபாத்தின் ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் ஒன்று வந்தது. அதில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் சில ஆண்களுடன் இருந்ததாக தகவல் கிடைத்தது. இதை விசாரிக்க நேரில் சென்ற காவலர்கள் அந்தப் பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். தண்டிக்கும் வகையில் பெண்ணை பெல்ட்டால் காவலர்கள் அடித்துள்ளனர்.