ஜம்மு காஷ்மீரில், பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள வந்திருக்கும் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குல்காம் மாவட்டத்தில் மக்களை சந்தித்துப்பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கனரக வாகனத்தில் வந்து வந்துகொண்டிருந்த தினக்கூலிகள் ஐந்து பேரை பயங்கரவாதிகள் மூர்க்கத்தனமாக சுட்டுக்கொன்றனர்.
இவர்கள் அனைவரும் மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ராணுவத்தினரும் காவல்துறையினரும் அப்பகுதியை சுற்றிவளைத்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.