இந்தியா

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி

webteam

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 5.4 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 5,40,000 வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 31,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இவ்வீடுகளை கட்ட மத்திய அரசு 8,107 கோடி ரூபாய் மானியம் தந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

2022ம் ஆண்டுக்குள் ’அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு, அனைத்து மக்களுக்கும் வட்டி மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 37,43,000 வீடுகளுக்கு நிதியுதவி தரப்பட்டுள்ளது.