இந்தியா

வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5% ஆக குறைப்பு

Veeramani

வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5% ஆக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, வைரங்கள், ஆபரண கற்களுக்கான இறக்குமதி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மொபைல், சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்டவற்றின் உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு எந்த மாற்றமும் இன்றி ரூ.2.50 லட்சமாகவே தொடர்கிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.