இந்தியா

உ.பி.யில் திடீர் கலவரம்: தடை உத்தரவு, 49 பேர் கைது!

உ.பி.யில் திடீர் கலவரம்: தடை உத்தரவு, 49 பேர் கைது!

webteam

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில், இருபிரிவினரிடையே 2வது நாளாக மோதல் தொடர்ந்ததால் வன்முறையத் தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று குடியரசுத் தினத்தை கொண்டாடினர். அப்போது மற்றொரு பிரிவினருடன் மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். உயிரிழந்த இளைஞருக்கு நேற்று இறுதிச்சடங்கு நடைபெறும் போது மீண்டும் வன்முறை வெடித்தது. 

கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வதந்தி பரவமாமல் தடுக்க இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.