இந்தியா

குடியரசுத் தலைவர் தலைமையில் மாநில ஆளுநர்கள் கருத்தரங்கம்

குடியரசுத் தலைவர் தலைமையில் மாநில ஆளுநர்கள் கருத்தரங்கம்

Rasus

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், அனைத்து மாநில ஆளுநர்கள் கருத்தரங்கம் அக்.12 மற்றும் அக்.13 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் 2022-ஆம் ஆண்டில், ‘புதிய இந்தியா 2022’ எனும் முழக்கத்தோடு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் கருத்தரங்கின் முதல் நாளில், புதிய இந்தியா 2022-க்கான சாத்தியக் கூறுகள் குறித்து நிதி ஆயோக் சார்பில் விளக்கப்பட இருக்கிறது. அதேபோல, புதிய இந்தியா 2022-க்கான கட்டமைப்பு வசதிகள், புதிய இந்தியா 2022-க்கான மக்கள் சேவைகள் எனும் இருவேறு தலைப்புகளில் ஆளுநர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.

இரு தலைப்புகளில் நடைபெறும் விவாதங்களின்போதும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கருத்தரங்கில் பங்கேற்பார்கள். 13-ம் தேதி நடைபெறும் 2-வது நாள் கருத்தரங்கில், மாநிலங்களில் உயர்கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற இருக்கும் 48-வது கருத்தரங்கு இது என்றாலும், குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கருத்தரங்கு இதுவாகும்.