சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 மாத காலம் தொடர்ந்து நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜை, வரும் ஞாயிறன்று தொடங்குகிறது. அப்போது சபரிமலை கோயிலுக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில் பெண்களும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு வரை 46 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பதிவு செய்த பெண்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு பெண்களை அனுமதிப்பது எப்படி என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.