இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை

webteam

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்த ராதன் சிங் (45) என்ற பத்திரிகையாளரை நேற்று இரவு மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.