பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த குஜராத் எம்எல்ஏக்கள் 44 பேர் இன்று அதிகாலை அகமதாபாத் சென்றடைந்தனர்.
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அகமது படேலின் வெற்றியை உறுதி செய்ய 44 எம்எல்ஏக்களையும் பெங்களூருவுக்கு அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைத்தது.
இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அவர்கள் அனைவரும் பெங்களூருவில் இருந்து இன்று அதிகாலை குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வருகையை யொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.