இந்தியா

உ.பி: 426 அரிய வகை ஆமைகள் பறிமுதல்; ஒருவரிடம் விசாரணை

உ.பி: 426 அரிய வகை ஆமைகள் பறிமுதல்; ஒருவரிடம் விசாரணை

Sinekadhara

உத்தரப் பிரதேசத்தில் அரியவகை ஆமைகளை கடத்திய நபர், ரயில்வே காவல்துறையினரிடம் சிக்கினார். கோரக்பூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் உடைமைகளை சந்தேகத்தின்பேரில் காவலர்கள் பரிசோதனை செய்தனர். அதில் 426 அரிய வகை ஆமைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.