இந்தியா

எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் கிடக்கும் 4122 வழக்குகள்..! - தமிழகத்தில் ?

எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் கிடக்கும் 4122 வழக்குகள்..! - தமிழகத்தில் ?

webteam

இந்திய அளவில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பதியப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகள் 4122 எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அளவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் குவிகின்றன. 140 கோடிக்கும் அதிகமானோர் வசிக்கும் மக்கள் கொண்ட நாட்டில், இந்த வழக்குகளுக்கு உடனே தீர்ப்பு வழங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். இதனால் தான் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குகின்றன. இதிலும் பணம், வசதி படைத்தோர் அல்லது பதவி, அதிகாரத்தில் இருப்போர் என்றால், அவர்கள் நன்கு வாதாடும் திறன் கொண்ட வழக்கறிஞர்களைக் கொண்டு தங்கள் வழக்குகளை காலம் தாழ்த்துகின்றனர். இதனால் தான், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்திய அளவில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்திய அளவில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 4122 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மாநில அளவில், 992 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக, 331 வழக்குகளுடன் ஒடிஷா 2ஆம் இடத்திலும், 321 வழக்குகளுடன் தமிழகம் 3ஆம் இடத்திலும் உள்ளது. கேரளாவில் 312, பீகாரில் 304, மகாராஷ்டிராவில் 303, மேற்கு வங்கத்தில் 269, மத்தியப் பிரதேசத்தில் 168 மற்றும் ஜார்க்கண்டில் 160 என எம்.எல்.ஏக்கள் மீதான இத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன.