உலகின் 40 சதவீத மக்களுக்கு கல்வி அவர்கள் தாய்மொழியிலோ அல்லது அவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் மொழியிலோ கிடைப்பதில்லை என ஐநாவின் துணை அமைப்பான யுனெஸ்கோ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாய்மொழியில் கற்பிக்கத்தெரிந்த ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள் கிடைக்காதது, புலம் பெய்ர்ந்து வாழ்தல் போன்றவையே இதற்குக் காரணம் என்கிறது அந்த ஆய்வு. சில ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் 90% பேர் தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பின்றி இருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பல்வேறு கலாசார பின்னணி கொண்டவர்களுக்கும் கல்வியை கொண்டு அந்தந்த கல்வி நிலையங்களே பயிற்று மொழியைத் தேர்வு செய்யும் வகையில் பல மொழி கல்விக்கொள்கையை கையாள வேண்டும் என்றும் யுனெஸ்கோ அமைப்பின் சர்வதேச கல்வி கண்காணிப்பு குழு அறிவுறுத்தியிருக்கிறது. சர்வதேச தாய்மொழி தினத்தை ஒட்டி இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.