இந்தியா

மேற்கு வங்கத்தில் 4 பேர் சுட்டுக்கொலை? - அறிக்கை கேட்ட தேர்தல் ஆணையம்

webteam

மேற்கு வங்கத்தில் 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 4ஆவது கட்ட வாக்குப்பதிவு 44 தொகுதிகளில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி சட்டர்ஜியின் கார் மீது உள்ளூர் பொதுமக்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. இதைதொடர்ந்து வெடிகுண்டு வீச்சும் அப்பகுதியில் நடைபெற்றது.

இதனால் சிஆர்.பிஎஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கம் கூச்பெஹாரில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த 4 பேரில் ஒருவர் வாக்களிக்க சென்ற இளம் வாக்காளர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.