இந்தியா

போலி தரிசன டிக்கெட்: திருப்பதியில் 3 பேர் கைது

webteam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டை போலியாக தயாரித்து விற்ற 4 பேர் சிக்கினர்.

திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் விஜயா வங்கியை சேர்ந்த இருவர் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்‌. 

சுரேந்திரா, கனகராஜ் என்ற அந்த 2 ஊழியர்கள் திருப்பதியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர் வாசு மற்றும் அதன் ஊழியர்களுடன் இணைந்து போலி சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை தயாரித்திருக்கின்றனர். இந்த டிக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டு அதனை ஸ்கேன் செய்யாமலேயே சுரேந்திராவும், கனகராஜும் விட்டிருக்கின்றனர். விஜிலன்ஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் நடத்திய சோதனையில் இவர்கள் கையும் களவுமாக சிக்கியிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டு இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.