இந்தியா

அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி!

அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி!

webteam

குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் கனமழை காரணமாக அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். 

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா, கேரள மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் வடோதரா, அகமதாபாத், சூரத், சவுராஷ்டிரா, நவ்சாரி நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. மக்கள், எங்கும் செல்ல முடியாத நிலையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள பிரகதிநகர் பகுதியில் மூன்று தளங்களைக் கொண்ட அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக இடிந்து தரைமட்டமானது. கட்டத்தில் பலர் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, தீயணைப்புதுறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள் ளன. இதுவரை 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால்‌ மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.