டெல்லி-மதுரா ரயிலில் முஸ்லிம் சகோதரர்களை தாக்கியதுடன், ஜுனைத் என்ற 16 வயது சிறுவனைப் படுகொலை செய்த சம்பவத்தில், டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
படுகொலை சம்பவம் நடந்தவுடன் ரமேஷ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். உணவு இன்ஸ்பெக்டரான மற்றொரு அரசு ஊழியர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார், இன்னும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் ஜுனைத்தையும் அவரது சகோதரரையும் மாட்டுக்கறி உண்பவர்கள் என்றும், தேச விரோதி என்றும் திட்டியதோடு கடுமையாகத் தாக்கியுள்ளார். ஜுனைத்தையும், அவரது சகோதரரையும் கத்தியால் குத்திய அந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ரயில் பயணிகளில் ஒருவர் கூட சாட்சி சொல்ல முன்வராததால், கொன்ற நபரைக் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுனைத் படுகொலை மற்றும் இஸ்லாமியர்கள், சிறுபான்மையினரின் தாக்கி கொலை செய்வதற்கு எதிராக “நாட் இன் மை நேம்” என்ற பெயரில் நாடு முழுவதும் பேரணி நடைபெற்று வருகிறது.