இந்தியா

குஜராத்தில் 397 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்

webteam

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 397 பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

குஜராத் தேர்தல் களத்தில் உள்ள 1,828 வேட்பாளர்கள் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரங்களை 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. வேட்பாளர்களில் 1098 பேர் பிளஸ் டூ அல்லது அதற்குக் கீழ் படித்தவர்கள் ஆகும். போட்டியிடுபவர்களில் 118 பேர் பெண்கள் ஆவர். தற்போது நடைபெற்று வரும் முதற்கட்டத் தேர்தல் களத்தில் உள்ள 977 வேட்பாளர்களில் 198 பேருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாக தங்களது பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளனர். 

இரண்டாம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 851 பேரில் 199 பேர் கோடீஸ்வரர்கள் எனவும் தெரியவந்துள்ளது. கோடீஸ்வர வேட்பாளர்கள் 397 பேரில் 131 பேர் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்துள்ளனர். இவர்களில் 142 பேர் பாரதிய ஜனதாவையும், 127 பேர் காங்கிரசையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஆவர்.