இளைஞர்களின் உயிர் பறிக்கும் காரணங்கள் எவை எவை என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இளைஞர்களின் உயிர் பறிக்கும் காரணங்கள் எவை எவை என்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 15 முதல் 29 வயதினரில் 38 விழுக்காடு இளைஞர்கள் விபத்துகளால் உயிரிழப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் சாலை விபத்துகளால் மரணிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 26 விழுக்காடாகவும், பிற விபத்துகளால் உயிரிழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை 12 விழுக்காடாகவும் உள்ளது. மேலும் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை, கவலையளிப்பதாக உள்ளது.
16 விழுக்காடு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட தகவல், புள்ளி விவரங்கள் மூலம் கிடைத்துள்ளன. மேலும், இதயம் சார்ந்த பாதிப்புகள் மற்றும் செரிமானம் தொடர்பான நோய்களால் உயிரிழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை முறையே 9 விழுக்காடு மற்றும் 7 விழுக்காடாக உள்ளது.